தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழும் பல பிரபலங்கள் ஏதாவது ஒரு திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஏன் நடிகை திரிஷா கூட ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தங்கையாக தான் நடித்திருப்பார். அதேபோல் நடிகர் விமல் விஜயின் கில்லி திரைப்படத்தில் நடித்திருப்பார். விஜய் சேதுபதியும் விஜயின் குருவி திரைப்படத்தில் கூட ஒரு கேமெியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இப்படி தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய பிரபலங்களாக இருப்பவர்கள் கொஞ்ச நாட்களுக்கு முன்பாக ஒரு சில திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இவர்களெல்லாம் நடிகர்கள். ஆனால் இயக்குனர்கள் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை இதில் நாம் தெரிந்து கொள்வோம்.
உங்கள் அனைவருக்கும் தெரியும். லோகேஷ் கனகராஜ் காக்கிநாடா கட்ட என்ற பாடலில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் வருவார். இதை பார்த்த யாருமே அவர்தான் லோகேஷ் என நம்பவே மாட்டார்கள். அப்படி ஒரு தோற்றத்தில் இருப்பார். நம்ம லோகேஷ் கனகராஜ் அதைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனை தான் பார்க்க போகிறோம் .
காதல் வைரஸ் என்ற திரைப்படத்தில் அப்பாஸ் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருப்பார்கள். ஸ்ரீதேவி தனது கையில் பக்கெட் உடன் வெளியில் வரும் சமயத்தில் காருக்குள் கத்தியை ஆட்டிக்கொண்டு ஒரு நபர் அமர்ந்திருப்பார். அவர்தான் வெற்றிமாறன் தற்போது சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக வளம் வரும் இவர் அந்த திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்திருப்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
அதைத்தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் வித்தியாசமான கதைகளை கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் பிரபலமாக இருக்கும் பா ரஞ்சித் சென்னை 600028 திரைப்படத்தில் நடித்திருப்பார். நடிகர் ஜெய் பால் போட வரும் போது பீலிங்கில் இயக்குனர் பா ரஞ்சித் நின்று கொண்டிருப்பார். இதை யாருமே கவனித்திருக்க மாட்டார்கள்.
அடுத்ததாக அட்லி இவர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் பல ஆண்டுகளாக உதவி இயக்குனராக வேலை பார்த்தார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் கிளாப் போர்டு அடிப்பதற்கு நின்று கொண்டிருப்பார். இவர்கள் அனைவரும் தற்போது சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களாக வலம் வருகிறார்கள். ஆனால் அவர்கள் நடிக்கும் போது தெரியாது நாம் இவ்வளவு பெரிய இயக்குனர்களாக வரப்போகிறோம் என்பது..