விபத்தில் சிக்கினார் விஜய் சேதுபதி… முடங்கிப்போன படப்பிடிப்புகள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

By Soundarya on தை 30, 2026

Spread the love

விஜய் சேதுபதிக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள செய்தி அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ‘காந்தி டாக்ஸ்’ பட செய்தியாளர் சந்திப்பின் போது, அவர் கையில் கட்டுடன் காணப்பட்டார். அப்போது தனக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து உறுதிப்படுத்திய அவர், மருத்துவர்களின் அறிவுரைப்படி அடுத்த எட்டு வாரங்களுக்குத் தீவிர ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தத் திடீர் உடல்நலக் குறைவால், அவர் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மணிகண்டன் இயக்கத்திலான ‘காட்டான்’ மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து நடிக்கும் ‘அரசன்’ ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், அப்படங்களின் தயாரிப்புப் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவர் இன்று வெளியாகியுள்ள ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் விளம்பரப் பணிகளில் காயம் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுவதாகப் பாராட்டுகள் குவிகின்றன.