உலகையே அதிரவைத்த சாமர்த்தியம்..! “ஒரே நேரத்தில் 20 ஆண்களோடு காதல்”. காதலர்கள் கொடுத்த பரிசில் புது வீடு வாங்கிய இளம்பெண்…!!

By Soundarya on தை 30, 2026

Spread the love

சீனாவின் ஷென்சென் நகரைச் சேர்ந்த சியாஒலி என்ற இளம்பெண்ணின் இந்தத் தனித்துவமான செயல், 2016-ல் முதன்முதலில் வெளியாகி தற்போது மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், தனது முதிய பெற்றோருக்காகச் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற அழுத்தத்தில் இந்தத் திட்டத்தைத் தீட்டியதாகக் கூறப்படுகிறது.

அவர் தனது 20 காதலர்களிடமும் ஆப்பிள் நிறுவனம் அப்போது அறிமுகப்படுத்தியிருந்த iPhone 7 போனைப் பரிசாகக் கேட்டுப் பெற்றுள்ளார். பின்னர் அந்த 20 போன்களையும் ‘ஹுய் ஷோ பாவோ’ (Hui Shou Bao) என்ற மொபைல் மறுசுழற்சி நிறுவனத்திடம் விற்று, சுமார் 1.2 லட்சம் யுவான் (அன்றைய மதிப்பில் ஏறத்தாழ ₹14 லட்சம்) ஈட்டியுள்ளார். அந்தப் பணத்தைக் கிராமப்புறத்தில் அவர் வாங்கிய வீட்டிற்கான முன்பணமாக (Down payment) பயன்படுத்தியுள்ளார். சீன சமூக வலைதளமான ‘வைபோ’-வில் (Weibo) #20mobilesforahouse என்ற ஹேஷ்டேக் மூலம் வைரலான இச்சம்பவம், அவரது சமயோசித புத்தியைப் பாராட்டியும், உணர்வுகளை ஏமாற்றியது தவறு என்றும் இன்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது.