CINEMA
படம் முடிஞ்ச மாதிரி தெரியல.. வாழை படத்தை பார்த்து விட்டு தழுதழுத்த குரலில் பேசிய விஜய் சேதுபதி..!!
முன்னணி இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரிலீசான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 23-ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் வாழை திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் வாழை படம் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது, மாரி செல்வராஜ் சார் இயக்கத்தில் உருவான வாழை படத்தை பார்த்தேன். ரொம்ப அற்புதமான திரைப்படம். இன்னும் படம் முடிஞ்ச மாதிரி தெரியல. அதுக்குள்ளேயே தான் இருக்கிற மாதிரி இருக்கு.
படத்துல பேசுற, அரசியலா இருக்கட்டும் வசனமா இருக்கட்டும், நடிச்ச நடிகர்களா இருக்கட்டும் அந்த ஊர்ல அவங்க வாழ்க்கைக்கு மத்தியில இருக்கிற மாதிரி தான் இருக்கு. அதிலிருந்து வெளியே வர முடியல. இந்த மாதிரி ஒரு படம் எடுத்ததற்கு மாரி செல்வராஜுக்கு ரொம்ப நன்றி. செய்தித்தாள்களில் படிக்கும் போதும், செய்திகளை கேட்கும் போதும் ஹெட்லைனை மட்டும் படிச்சிட்டு கடந்து போயிடுவோம்.
ஆனா அதுக்கு பின்னாடி இருக்கிற வாழ்க்கையை ரொம்ப அழுத்தம் திருத்தமா பதிய வைத்ததற்கு ரொம்ப நன்றி. படத்தை தியேட்டர்ல வந்து பாருங்க. ஒரு அற்புதமான அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். இப்படி ஒரு வாழ்க்கையை தெரிஞ்சுக்கிறது நம்ம வாழ்க்கை மேல நமக்கே ஒரு சில கேள்விகளை எழுப்பும் அப்படின்னு நான் நம்புறேன். படத்தை தியேட்டர்ல வந்து பாருங்க என கூறியுள்ளார்.