CINEMA
நடிப்பதை தாண்டி துணி நெய்தலையும் பார்க்கும் பிரபல சீரியல் நடிகர்.. வைரல் வீடியோ..!!
பிரபல சின்னத்திரை நடிகரான விஷ்ணுகாந்த் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலில் நடித்ததன் மூலம் திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
இதனை அடுத்து 2022-ஆம் ஆண்டு என்றென்றும் புன்னகை சீரியலில் நடித்தார். ஆனால் அந்த சமயம் விஷ்ணுகாந்த் அவ்வளவாக மக்களிடையே வரவேற்பு வரவில்லை. அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது சிப்பிக்குள் முத்து சீரியல் தான். தற்போது குடிகண்டலு என்ற தெலுங்கு மொழி சீரியலில் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறார்.
விஷ்ணுகாந்த் ஆந்திரம், தெலுங்கானாவிலும் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தன்னுடன் இணைந்து நடித்த சம்யுக்தா என்பவரை விஷ்ணு தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். காதல் திருமணம் செய்து சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் விஷ்ணுகாந்த்துணி நெய்யும் போது எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் நமது குடும்ப தொழிலை மறக்கக்கூடாது என கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram