vijay sethupathi

நான் சினிமாவில் வில்லனா நடிச்சதுக்கு காரணம் இதுதான்… உண்மையை உடைத்து பேசிய விஜய் சேதுபதி…

By admin on மார்கழி 16, 2024

Spread the love

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி நடிகராவார். நடிகர் மட்டுமல்லாமல் பாடகர் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியராக இருக்கிறார். சினிமாவில் பின்னணியில் கூட்டத்தில் ஒருவராக நடித்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இன்று நடிகராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி.

   

தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து வில்லனாக நடிப்பது வயதான தோற்றம் என அனைத்து கதாபாத்திரங்களில் ஏற்று நடந்து எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்து மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி.

   

விஜய் சேதுபதி நடிப்புக்கு மட்டுமில்லாமல் அவரது அறிவுப்பூர்வமான பேச்சு எதார்த்தமாக பழகுதல் தனது ரசிகர்களுடன் முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்து கொள்வது போன்ற செயல்களால் மக்கள் இவரை வெகுவாக விரும்புகின்றனர். இவரது நடிப்பில் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி விடுதலை பாகம் 2 வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

 

தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிக்க முடிவெடுத்ததை பற்றி கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் சினிமாவில் ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதனால் தான் வில்லனாக நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். குறிப்பாக மாஸ்டர் படத்தில் நான் வில்லனாக நடிக்கணும் அப்படிங்கறத லோகேஷ் என்கிட்ட சொல்லவே இல்ல. வேற ஒருத்தர் மூலமா தான் எனக்கு தகவல் தெரிந்தது. லோகேஷ் என்கிட்டே பேச தயங்குறார்னு தெரிஞ்சுது. உடனே லோகேஷ்க்கு போன் பண்ணி என் வீட்டுக்கு வரச் சொல்லி பத்தே நிமிஷத்துல கதை கேட்டு அந்த படத்துல நான் வில்லனா நடிச்சேன் என்று ஓப்பனாக பகிர்ந்து இருக்கிறார் விஜய் சேதுபதி.