பிக்பாஸ் நிகழ்ச்சியால் வந்த பிரச்சினை… விஜய் சேதுபதி மீது போலீசில் புகார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

By Soundarya on மார்கழி 16, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடகர்,  நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர் விஜய் சேதுபதி. பின்னணியில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சேதுபதி, 96, கருப்பன், விக்ரம் வேதா போன்ற தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மிகக் குறுகிய காலத்தில் அதிகப்படியான படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் விஜய் சேதுபதி.

   

கடைசியாக மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

   

 

கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.  இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி யில் புகழ்பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து நடிகர் தீபக் தவறான கருத்து கூறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தீபக்கின் கருத்தை ஒளிபரப்பியதால் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி மீது வழக்குப்பதிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனியார் நிறுவனத்தின் டைல்ஸ் தான் அசல் என்றும் ஆத்தங்குடி டைல்ஸ் போலி என்றும் கூறப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.