#image_title
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகராவார். ஆரம்பத்தில் பின்னணியில் கூட்டத்தோடு கூட்டமாக நடிக்க ஆரம்பித்தார் விஜய் சேதுபதி. பின்னர் கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பை முறையாக கற்றுக் கொண்டார். 2010 ஆம் ஆண்டு “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி.
தொடர்ந்து நானும் ரவுடிதான், சேதுபதி, 96, விக்ரம் வேதா, ஆரஞ்சு மிட்டாய் என பலதரப்பட்ட திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. வயதான தோற்றம் வில்லன் என தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர் எந்த அந்தஸ்தை பெற்றார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருக்கும். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விடுதலை 2 படம் கூட நல்ல விமர்சனங்களை பெற்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. இப்போது அவர் முக்கியமான ஒரு முடிவை எடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
அது என்னவென்றால் விஜய் சேதுபதி நான் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் தனக்கு கைகொடுத்து தூக்கி விட்ட இயக்குனர்கள் படங்களில் முதலில் நடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து இருக்கிறார். முதலாவதாக பாலாஜி தரணிதரன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் ஜனவரி மாதம் 18ஆம் தேதி தொடங்குகிறது. அதுமட்டுமல்லாமல் சொந்தமாக தானே படம் இயக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. இதன் மூலம் பலருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விருப்பத்தினால் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்து இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…