பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி போட்டியாளர்களின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. போட்டியாளர்களிடம் டம்மி டிராபி ஒன்றை கொடுத்து இறுதியில் அதை கொண்டு வந்தால் ஒரிஜினல் டிராபி கிடைக்கும் என விஜய் சேதுபதி வாழ்த்தி அனுப்பியுள்ளார்.

ரவீந்தர் சந்திரசேகர், சாட்சனா நமிதாஸ், தீபக், தர்ஷா குப்தா, சத்யா, கானா ஜெஃப்ரி, சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, அன்சிகா, தர்ஷிகா, அருண் பிரசாத், விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அர்ணவ் ஆகியோர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர். இந்த முறை சரிசமமாக ஒன்பது பெண் போட்டியாளர்களும் 9 ஆண் போட்டியாளர்களும் வந்துள்ளனர்.

முதல் நாளே வீட்டுக்கு நடுவே கோடு போட்டு ஆண்கள் ஒருபுறம் பெண்கள் ஒருபுறம் இருக்க வேண்டும் என முடிவெடுக்க பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் ஒரு பக்கம் டபுள் பெட்ரூம் செட் அப் இன்னொரு பக்கம் சிங்கிள் பெட்ரூம் செட் அப் இருந்துள்ளது. யார் எந்த பக்கம் போக வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

அப்போது ஆண்கள் அணியில் இருந்த சத்யா, ரவீந்தர், தீபக் ஆகியோர் சிங்கிள் பெட் வேண்டும் என கூறினர். அதேபோல ஆனந்தி, தர்ஷா குப்தா ஆகியோரும் சிங்கிள் பெட்ரூம் செட் அப் வேண்டும் என கேட்டனர் இதனால் கோபம் அடைந்த விஜய் சேதுபதி போட்டியாளர்களை சற்று வெளியே செல்லுமாறு கூறியுள்ளார் ஆரம்பத்திலேயே இரு தரப்பினருக்கும் சண்டை வெடித்துள்ளது. இதனால் இனிவரும் நிகழ்ச்சிகளும் சுவாரஸ்யமாகத் தான் இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
