என்னா டேஸ்டு… விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இனிப்புகளை துள்ளி குதித்து சாப்பிட்ட எலிகள்… கண்டு கொள்ளாத ஊழியர்கள்…

By admin on ஐப்பசி 7, 2024

Spread the love

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பண்டம் உணவு என்றால் இனிப்பு தான். பல விதமான கண்ணை கவரும் இனிப்புகள் புது புதிதாக வருகின்றன. இனி தீபாவளி சீசன் தொடங்கி விட்டால் கண்ணை கவரும் இனிப்புகளின் வரவு நம்மை இழுக்கும். மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்கு சிறு உயிரினங்களுக்கு கூட இனிப்பு பிடிக்கும்.

   

அப்படியே ஒரு எலி இனிப்பை ரசித்து ருசித்து சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் டெல்லியை சேர்ந்த பேக்கரி ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இனிப்புகளுக்கு மேலே அங்கும் இங்கும் நடந்து எலி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.

   

ஆனால் அங்கே பேக்கரியில் ஓரளவு கூட்டம் இருந்த போதும் ஊழியர்கள் அங்கும் இங்கும் விற்பனை செய்து கொண்டிருந்த போதும் இந்த எலி கண்ணாடி குவளையில் வந்து போனது யாரும் கண்டு கொள்ளவே இல்லை. இந்த சம்பவத்தை வாடிக்கையாளர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

 

இதைப் பார்த்த பலரும் கொந்தளித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உங்களை நம்பி பொருட்களை உணவுகளை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இப்படித்தான் உணவுகளை விற்பனை செய்கிறீர்களா? உணவு சுகாதாரம் என்ற ஒன்றே கிடையாதா? பணம் கொடுத்து வாங்கும் பொருளுக்கு இவ்வளவுதான் மதிப்பா என்று கொந்தளித்து பேசி வருகின்றனர்.