என் லட்சுமிய யாராவது கண்டுபிடிச்சு கொடுங்க.. வெளியானது மக்கள் செல்வனின் ‘மகாராஜா’ பட ட்ரெய்லர்..

By Mahalakshmi on மே 30, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து தமிழ் சினிமாவின் வெரைட்டியான நடிகர்களின் ஒருவராக வலம் வருகிறார். தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் தனது திரைப்படத்தை தொடங்கிய விஜய் சேதுபதி தொடர்ந்து பல திரைப்படங்களின் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கின்றார்.

   

அதிலும் இவருக்கு வில்லன் கதாபாத்திரம் பொருத்தமாக இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன், கேமியோ என எந்த கேரக்டராக இருந்தாலும் மிகச் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்து விடுவார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. சமீபத்தில் ஹிந்தியில் வெளியான ஜவான் திரைப்படத்திலும் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

   

 

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாகி இருக்கின்றது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் ஆக்சன் ஜானகில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் விஜய் சேதுபதிக்கு நல்ல கம்பாக்காக இருக்கும் என்று கூறப்படுகின்றது. சலூன் கடை வைத்திருக்கும் விஜய் சேதுபதி வீட்டிலிருந்து லட்சுமியை காணவில்லை காணாமல் போன லட்சுமி நபரா அல்லது பொருளா என தெரியாமல் போலீசார் திணறுகிறார்கள்.

இரண்டாம் பாதியில் ஆக்சன் தெரிக்க பல சஸ்பென்களுடன் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நித்திலன் சாமிநாதன் ஏற்கனவே குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படமும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இதை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் இரண்டாவது திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். இப்படத்தில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடித்துள்ளது மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. தற்போது வெளியான மகாராஜா படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படம் தொடர்பான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.