விழிப்புடன் இருங்கள்..! எதிரிகளின் சூழ்ச்சி… தொண்டர்களுக்கு விஜய் பரபரப்பு கடிதம்…!!

By Soundarya on மார்கழி 24, 2025

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தவெக மீதான ஆளுங்கட்சியின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள விஜய், திமுகவின் கடந்த கால அரசியல் நிலைப்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். அதில் அரசியல் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க நிர்வாகிகள் அனைவரும் எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

வரும் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களைச் சேர்ப்பதற்கும், புதிய வாக்காளர்களைக் கண்டறிந்து ஒருங்கிணைப்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார். ராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, வரும் தேர்தலில் சரித்திர வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர், அதற்காக இப்போதே துரிதமாகக் களப்பணியாற்ற வேண்டும் எனத் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.