தமிழகத்தில் பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். செவிலியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த தர்ணா மற்றும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாகச் செவிலியர் சங்கங்கள் அறிவித்துள்ளன
