லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்தது. கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் லியோ ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்ற லியோ படத்தில் 35 பிஜிஎம் போடப்பட்டு இருப்பதால் எல்லா கதாபாத்திரங்களும் மாஸ் என்ட்ரியாக இருக்கும் என கூறப்படுகிறது. லியோ பட இசை வெளியீட்டு விழா இந்த மாதம் 30-ஆம் தேதி நடக்க உள்ளது.

லியோ படத்தினை பட குழுவினால் முழுதாக பார்த்துவிட்டனர். முதலில் லியோ படத்தை பார்த்த தயாரிப்பாளர் லலித் first part சூப்பராக இருப்பதாக கூறினார். இதனைக் கேட்ட நெட்டிசன்கள் லியோ படத்தின் first part தான் நல்லா இருக்கா? அப்போ second part நல்லா இல்லையா? என பேசி வந்தனர். இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக லியோ படத்தை முழுவதுமாக பார்த்த விஜய் படம் சூப்பரா இருக்கு என லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளார். ரிலீசுக்கு முன்னரே படத்தின் வசூல் 480 கோடியை தாண்டிய நிலையில் மொத்தம் 1000 ஆயிரம் கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

