“அதை பற்றி பேசுனாலே டென்ஷன் ஆகிடுவா”.. மீனாவிடம் திட்டு வாங்கிய கலா மாஸ்டர்.. இதுதான் காரணமா..?

By admin on புரட்டாதி 22, 2023

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கிய மீனா 90’s காலகட்டத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானார்.

   

கடந்த ஆண்டு நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். தனது கணவரை இழந்து வாடிய மீனா இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

   

 

நடிகை மீனாவின் நெருங்கிய தோழியான டான்ஸ் மாஸ்டர் கலா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, கணவரின் மறைவால் மீனாவுக்கு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. நான் மீனாவை சந்திக்கும் போதெல்லாம் அவரது எதிர்காலத்தை பற்றி பேசுவேன். உனக்கென ஒரு துணை வேண்டும்; நீ இரண்டாவது திருமணம் செய்து கொள் என கூறுவேன்.

அதனை கேட்டவுடன் மீனா எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இரண்டாவது திருமணத்தை பற்றி பேசாதீர்கள் என கூறி என்னை அமைதியாக்கி விடுவாள். அதன் பிறகு அதைப் பற்றி பேசவே மாட்டேன் என கலா மாஸ்டர் கூறியுள்ளார்.