விதி செய்த சதி..! உயிரை பறித்த விஜய் ரூபானியின் லக்கி எண் 1206… வைரலாகும் விஷயம்..!!

By Soundarya on ஆனி 13, 2025

Spread the love

நேற்று மதியம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 242 பேரோடு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஆனது சில வினாடிகளிலேயே அங்கிருந்த மருத்துவ வளாகத்தின் மீது மோதி வெடித்து விபத்திற்குள்ளானது. இந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவரை தவிர 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜய் ரூபானி தான் வாங்கிய முதல் கார் தொடங்கிய அனைத்து விஷயத்திலும்  தன்னுடைய லக்கி நம்பர் ஆன 1206 என்ற எண் இருக்குமாறு வைத்துக் கொள்வாராம்.

தான் வாங்கிய அனைத்து வாகனங்களுக்கும் இந்த எண்ணை தான் வாங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று நடந்த விமான விபத்தில் கூட அவர் பனிரெண்டாவது நபராக தான் போர்டிங் செய்து இருக்கிறார். இதில் ஆச்சரியமும் சோகமும் என்னவென்றால் அவர்கள் விபத்தில் இறந்த நாளும் 12.06 அவருடைய லக்கி நம்பர்.