தமிழக முதலமைச்சர் விஜய், டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் முக்கியத் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்திக்காமல் அவசரமாகப் புறப்படுகிறார். இன்று காலை 10 மணியளவில் இந்த உயர்மட்டச் சந்திப்பு நடைபெறவிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், திடீரென அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்தத் திடீர் ரத்தைத் தொடர்ந்து, இன்னும் சற்று நேரத்தில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் சென்னை திரும்புகிறார். மிக முக்கியமாகக் கருதப்பட்ட இந்தச் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது, தமிழக மற்றும் தேசிய அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதங்களையும், பல்வேறு அரசியல் ஊகங்களையும் தற்பொழுது ஏற்படுத்தியுள்ளது.
