இனி ஒன்றிய அரசு அல்ல “இந்திய அரசு”… இனி நமக்குள்ள மோதல் இல்லை… முதலமைச்சர் எடுத்த திடீர் முடிவு.. ஆச்சர்யத்தில் ஆடிப்போன பிரதமர் மோடி..!!

By Soundarya on ஆனி 25, 2026

Spread the love

தமிழக முதலமைச்சர் விஜய், மத்திய அரசை இதுநாள் வரை ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிட்டு வந்த தனது அரசியல் நிலைப்பாட்டை தற்போது அதிரடியாக மாற்றியுள்ளார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள புதிய கடிதத்தில், மத்திய அரசுடன் தமக்கு எவ்வித மோதல் போக்கும் இல்லை என்பதை மிகவும் தெளிவுபடுத்தியுள்ளார். மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையிலான சுமூகமான உறவை மேம்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய முடிவை அவர் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இனிவரும் காலங்களில் மத்திய அரசை ‘இந்திய அரசு’ என்றே அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிட முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லாடல் கடந்த காலங்களில் ஏற்படுத்திய அரசியல் விவாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த மாற்றம் பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் இந்த திடீர் அதிரடி மாற்றம் தமிழக மற்றும் தேசிய அரசியல் களத்தில் தற்போது பெரும் பரபரப்பையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது.