தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் விடா முயற்சி. இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியான விடா முயற்சி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத நிலையில் வசூலில் பெருமளவு அடி வாங்கியுள்ளது. விஜய் நடிக்கும் படங்கள் முதல் நாளிலேயே 100 கோடிக்கும் அதிகமான வசூலை உலக அளவில் ஈட்டி வரும் நிலையில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணையவே 5 நாட்கள் ஆகிவிட்டது. இனிவரும் நாட்களிலும் வசூல் அதிகரிக்க வாய்ப்பில்லை என தெரிகிறது.

இதனால் லைகா நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படும் எனவும் தெரிகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் லைகா நிறுவனத்திற்கு சோதனை காலம் தான் என்றும் அடுத்ததாக விஜய் மகன் படம் வெற்றி பெற்றால் தான் உண்டு எனவும் கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில் அஜித்தின் அடுத்த படத்துக்கு போட்டியாக தனுஷின் திரைப்படம் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. தன் அக்கா மகனை அறிமுகப்படுத்த தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கூட வருவதை தவிர்த்து விட்டு தன்னுடைய இட்லி கடை படத்தை விடாமுயற்சியுடன் தனுஷ் இயக்கி வந்தார்.

ஏப்ரல் 10ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கு போட்டியாக தனுஷ் இட்லி கடை படத்தை வெளியிடுவதில் உறுதியாக இருக்கின்றார். கடந்த வருடம் இதனைப் போலவே தமிழ் சினிமாவில் ஒரு நல்ல படம் கூட வெளியாகி திரையரங்குகளை உற்சாகப்படுத்தாத நிலையில் விஜய்யின் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த வருடம் தளபதியின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகுமா அல்லது அடுத்த ஆண்டுக்கு தள்ளி போகுமா என்ற பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சச்சின் படத்தை விஜய் ரசிகர்கள் திரையரங்கில் காண தயாராகி விட்டனர்.

தனுஷின் இட்லி கடை மற்றும் விஜயின் சச்சின் ரீ ரிலீஸ் உள்ளிட்ட படங்கள் அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தின் பாக்ஸ் ஆபிஸுக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படம் வசூலில் அடி வாங்கி வரும் நிலையில் தற்போது அடுத்த படத்திற்கும் தனுஷ் மற்றும் விஜய் இருவரும் போட்டியாக உள்ளது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் அரசியலுக்கு சென்று விட்டால் இனி சினிமாவில் அஜித் கலக்கப்போகிறார் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்த நிலையில் அரசியலுக்கு சென்ற பிறகும் அஜித்தை விடாமல் அவருக்கு போட்டியாக விஜய் நின்று கொண்டிருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
