உங்கள் அசல் தொகையை விட இரண்டு மடங்கு அதிக பணம் வட்டியிலேயே பெறலாம்… அதற்கு இந்த யுக்தியை பயன்படுத்தி போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் சேருங்க….

By admin on மாசி 12, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் பணத்தை சேமிக்க வேண்டும் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் நமக்கு அதிகப்படியான வருமானம் கிடைக்க வேண்டும் என்றால் முறையாக திட்டமிட்டு சேமித்தல் அவசியமானது. அப்படி நீங்கள் முதலீடு செய்யக்கூடிய பணத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக உங்களுக்கு வட்டி பணமே கிடைத்தால் அது நமக்கு ஒரு ஜாக்பாட் போல தான் இருக்கும். அப்படி நீங்கள் போஸ்ட் ஆபிஸின் குறிப்பிட்ட திட்டத்தில் இந்த மாதிரி நீங்கள் பிளான் செய்து முதலீடு செய்யும்போது உங்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல் முதலீட்டை விட அதிக வட்டி பணம் கிடைக்கும். அதை பற்றி இனி காண்போம்.

   

போஸ்ட் ஆபீஸ் இன் நேரம் வைப்புத் தொகை அல்லது FD எனப்படும் திட்டத்தில் ஒன்று முதல் ஐந்து வருட கால வாசம் வரையிலும் பணத்தை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் 80 சி சட்டத்தின் கீழ் வரிசலுகையும் கிடைக்கிறது.

   

இது தபால் அலுவலகத்தின் நேர வைப்பு திட்டத்தின் மூலம் அசல் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக வட்டி பணம் ஈட்டலாம். உங்களது பணத்தை மூன்று மடங்காக மாற்றலாம். அதற்கு நீங்கள் 5 வருட நிலையான வைப்புத் தொகை திட்டத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு நீங்கள் 10 லட்ச ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

 

ஐந்து வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு ரூ 4,49,948 ரூபாய் வட்டி கிடைக்கும். அப்போது உங்களது மொத்த தொகை ரூ 14,49, 948 ஆக இருக்கும். ஆனால் இந்த திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீங்கள் நீட்டிக்க வேண்டும். அப்பொழுது உங்களது வட்டி மட்டும் ரூபாய் ரூ 11,02,349 ஆக இருக்கும்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களது மொத்த தொகை ரூபாய் 21,02,349 ஆக மாறும். மீண்டும் அதை 5 வருடங்களுக்கு நீங்கள் நீட்டிக்க வேண்டும். அப்போது மொத்தம் 15 ஆண்டில் நீங்கள் செய்த பத்து லட்ச ரூபாய் முதலீட்டிற்கு வட்டி மட்டும் ரூபாய் 20, 48, 297 ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தம் 15வது ஆண்டின் முடிவில் உங்களது 10 லட்ச ரூபாய் 30, 48, 297 ரூபாய் ஆக மாறி இருக்கும். இதன் மூலம் உங்களது அசலை விட இரண்டு மடங்கு அதிகமாக வட்டியை நீங்கள் பெற முடியும். மேலும் உங்கள் பணமும் மூன்று மடங்காக அதிகரிக்கும்.