தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் வெறும் 5 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மும்முரமாக வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தமுறை தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப்போட்டி நிலவ உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு வெற்றிக்கோப்பை சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் TVK மனு அளித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த சின்னத்துடன் சேர்த்து, ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில், உள்ளிட்ட சின்னங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘பிகில்’, ‘கில்லி’ ஆகிய படங்களை ரெபரென்ஸாக வைத்தே வெற்றிக்கோப்பை சின்னத்தை TVK தரப்பு கோரியிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
