தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கு முன்னதாக அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது அதனை விஜய் களத்தில் இறங்கி முற்றிலுமாக மாற்றியுள்ளார். இதனால் 2026 தேர்தல் களம் யாருக்கானது என்பது பரபரப்பாகவே பார்க்க படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் புதிதாக அரசியலில் களம் இறங்கியுள்ள விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் முதல்வர் வேட்பாளர் விஜய் தான், யாருடனும் கூட்டணி கிடையாது என்று சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தமிழக வெற்றி கழகம் கட்சியின் உத்தேச வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 234 தொகுதிகளில் இருந்து பட்டதாரிகள், செல்வாக்கு உள்ளவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் என வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்து TVK நிர்வாகிகள் தலைமையிடம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் விஜய் வேட்பாளர்களை நேர்காணல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
