கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் N. ஆனந்த், CTR நிர்மல் குமாரின் முன் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவர்கள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே மாவட்ட செயலாளர் மதியழகன் கைதான நிலையில் ஆதவ் அர்ஜுனா மீதும் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பது தமிழக வெற்றி கழகம் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
