ஒரு ஹீரோவை வைத்து படம் எடுப்பது என்பதே பெரிய காரியம் என்ற நிலையில், பல ஹீரோக்களை வைத்து படம் எடுப்பது பெரிய காரியம் தான். இப்போது தான் சினிமாவில் ஒரே படத்தில் பல நடிகர்கள் கர்வம் இன்றி நடித்து வருகின்றனர். தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் நீண்ட நாள் கனவான பொன்னியின் செல்வன் படத்தில் பல ஹீரோ, ஹீரோயின்களை ஒன்றிணைத்து பொன்னியின் செல்வன் படத்தை இரு பாகங்களாக எடுத்து, அனைவரின் கனவையும் நிறைவேற்றினார் இயக்குநர் மணிரத்னம். அப்படியிருக்க ஒரே படத்தில் 11 இயக்குநர்கள் நடித்திருந்தனர் எனக் கூறினால் நம்ப முடிகிறதா?

#image_title
இந்தப் படத்தை பலரும், பலமுறை பார்த்திருப்போம். ஆனால் இந்தப் படத்தில் 11 இயக்குநர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம். குடும்ப கமர்ஷியல் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் என்றுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அப்படி 2009-ம் ஆண்டு ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு இன்று வரையிலும் பல ரசிகர்கள் உண்டு. இதில் நடித்த அத்தனை பேருமே இயக்குனர்கள் தான்.

#image_title
தருண் கோபி, கேபி ஜெகன், சீமான் மற்றும் பொன்வண்ணன் இவர்கள் நான்கு பேருமே இயக்குனர்கள். இவர்களைத் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ரவி மரியா, நந்தா பெரியசாமி, மணிவண்ணன் மற்றும் மணிவண்ணனின் மருமகன்களாக நடித்த இளவரசு, ராஜ்கபூர், மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த சிங்கம் புலி இவர்கள் அனைவருமே இயக்குனர்கள் தான். இதனால் தான் இப்படம் மிகவும் எதார்த்தமாக இருந்தது எனலாம். ஒவ்வொருவரின் நடிப்பும், நம்மையே திரையில் காண்பது போல் அப்படியே ஒட்டி இருக்கும். இந்த காலத்தில் இப்படி எல்லாம் மறுபடியும் பார்க்க முடியுமா என்பதை ஏங்க வைக்கும் அளவிற்கு குடும்பங்களை வைத்து அதனுடைய உறவுகளின் முக்கியத்துவத்தை கொடுத்து உணர்வுபூர்வமாக காட்டப்பட்டிருக்கும்.

#image_title
அப்படிப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார்களாம். அதனை எடுக்கப் போவது மணிவண்ணனின் மகனாக இப்படத்தில் நடித்த கேபி ஜெகன். இவர் ஏற்கனவே விஜய்யை வைத்து புதிய கீதை படத்தை எடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இயக்குனர் சேரனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர், மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Thrilled and immensely honoured to direct the sequel to late director #RasuMadhuravan sir’s cult classic #MayandiKudumbathar. Counting on all your love, support and blessings!#MayandiKudumbathar2 #UnitedArts#MayandiKudumbathar2Announcement pic.twitter.com/DNfHwDdMPq
— K.P.Jagan (@jagan_dir) January 3, 2024
