தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சுந்தர் சி. இதுவரை எண்ணற்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ள அவர் இயக்கத்தில் வெளியான படங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி வருகின்றார். இப்படியான நிலையில் நடிகர் விஜய் பற்றி சுவாரசிய தகவல் ஒன்றை சுந்தர் சி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் உள்ளத்தை அள்ளித்தா.

கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் ரம்பா கதாநாயகியாக நடிக்க கவுண்டமணி, செந்தில் மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் முதலில் விஜய்யை நடிக்க வைக்க தான் சுந்தர் சி ஆசைப்பட்டு உள்ளார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜோசியம் மீது அதிக நம்பிக்கை கொண்டவராம். ஜோசியர் சொன்னது போல 1996 ஜனவரி 15ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்று கூறினாராம். ஆனால் ஏற்கனவே விஜய் நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை படமும் அதே தேதியில் தான் ரிலீஸ் ஆக இருந்தது.

அதனால் வேறு தேதிக்கு ரிலீஸ் மாற்றினால் விஜயை நடிக்க வைப்பதாக அப்பா எஸ் எஸ் சி கூறியுள்ளார். தேதியை மாற்ற முடியாது என தயாரிப்பாளர் உறுதியாக இருந்ததால் விஜய்க்கு பதிலாக உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கார்த்தியை நடிக்க வைத்து அந்த படத்தை ரிலீஸ் செய்தனர். படமும் சூப்பர் ஹிட் ஆனது. அந்தப் படத்தில் வரும் அழகிய லைலா பாடலுக்கு ரம்பா ஆடிய டான்ஸ் எவ்வளவு பெரிய ஹிட் என்பது அனைவரும் அறிந்ததுதான். இன்றும் இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
