மொட்டை அடித்துக் கொண்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய நடிகர் அஜித்.. இணையத்தில் தீயாய் பரவும் லேட்டஸ்ட் வீடியோ..!

By Nanthini on ஆனி 24, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். சுமார் இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் அதன் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அஜித் ரசிகர்களால் இந்த திரைப்படம் பெரிதும் கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 64 வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க போவதாக உறுதியாகிவிட்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேர்ல்ட்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்க உள்ள நிலையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு அஜித்தின் சம்பளமும் உயர்த்தப்பட்ட 180 கோடி சம்பளம் பெற உள்ளதாக தெரிகிறது. இது ஒரு பக்கம் இருக்க அஜித் கார் ரேஸில் பங்கேற்பதற்காக தீவிர பயிற்சியில் உள்ளார்.

   

அக்டோபர் மாதத்திற்கு பிறகு தான் அஜித் மீண்டும் படப்பிடிப்பில் இறங்குவார் என தெரிகிறது. இப்படியான நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அஜித் மொட்டை அடித்துக் கொண்டு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.