கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரைத் தர மறுத்துவரும் விவகாரத்தில், தமிழக முதல்வர் விஜய் அமைதி காப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்த போதும், தவெக தரப்பிலிருந்து அதற்கேற்ப உரிய எதிர்வினைகள் எதுவும் ஆற்றப்படவில்லை. எல்லாவற்றையும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்ற விஜய்யின் சமரசப் போக்கு தமிழகத்தின் உரிமையைப் பலவீனப்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்துப் பேசப் போவதாக தவெக அமைச்சர்கள் தெரிவித்துள்ள கருத்தும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.
இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், கர்நாடகத்திற்கு எதிராக முதல்வர் விஜய் கருத்து தெரிவித்தால் தன் படத்திற்கு அங்கு சிக்கல் ஏற்படும் என்ற வியாபார நோக்கத்தில்தான் அவர் மௌனம் காப்பதாக திமுகவினர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில் அரசியல் மற்றும் வணிக நலன்களைத் தாண்டி, மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய முக்கியக் கட்டத்தில் முதல்வர் விஜய் இருக்கிறாரா என்ற கேள்வி தற்போது பொதுவெளியில் எழுந்துள்ளது.
அகமதாபாத்தின் ஷிலாஜ் பகுதியில் அதிவேகமாக வந்த பல்சர் பைக் மோதியதில், பெண் ஒருவர் சுமார் 10 அடி தூரம் இழுத்துச்…
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, ரஷ்யாவிடம்…
தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டம் கொட்டப்பள்ளி மண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிசந்தர். இவருடைய மனைவி மமதா, கணவரிடம் கோபித்துக் கொண்டு…
கான்பூரில் நடைபெற்ற ஒரு கிட்டி பார்ட்டி, எதிர்பாராதவிதமாக ஒரு கொடூரமான கொலைத் திட்டத்திற்கான மறைப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.…
கல்லூரி படிப்பின் போது டெலிகிராம் சமூக வலைதளத்தில் வெறும் 300 மாணவர்களுடன் சிறிய முயற்சியாகத் தொடங்கப்பட்ட 'டெல்டா எஜுகேஷன்' இன்று…
கர்நாடக மாநிலம் தொட்டபள்ளாப்பூரில் உள்ள விடுதி ஒன்றில், 23 வயதான வித்யா என்ற பெண் அவரது கணவர் ஆனந்தால் ஐடி…