“ஜெயலலிதாவுக்கு அப்புறம் இவங்கதான்”…. சட்டசபையை அலறவிட்ட முனைவர் சௌமியா அன்புமணி…. பேச பேச வாயடைத்துப்போன விஜய்….!

By Nanthini on ஆவணி 20, 2026

Spread the love

தர்மபுரி சட்டமன்ற உறுப்பினரும் பாமக தலைவருமான சௌமியா அன்புமணி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆற்றிவரும் உரைகள் மற்றும் எழுப்பும் மக்கள் நலச் சார்ந்த கேள்விகள், சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகின்றன. அவையில் வெறும் காகிதங்களைப் பார்த்துப் படிக்காமல், ஆழமான தரவுகளுடனும் துல்லியமான முன் தயாரிப்புடனும் அவர் பேசும் முறை அனைவரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் நதிநீர் மேலாண்மை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அவர் முன்வைக்கும் கருத்துகள், தற்போதைய சூழலுக்கு மிகவும் அவசியமானவை என்று பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

சட்டப்பேரவையில் நீர்வளப் பாதுகாப்பு குறித்துப் பேசிய சௌமியா அன்புமணி, இயற்கை தந்த நீர்வளத்தை நாம் கண்முன்னேயே இழந்து வருவதாக வேதனை தெரிவித்தார். உலகிலேயே மிக அரிதான ‘தன்னூத்து’ நீர் ஆதாரம் ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து நெய்வேலியில் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் லிக்னைட் நிறுவனத்தின் அளப்பரிய நீர் உறிஞ்சலால் இன்று அது இல்லாமல் போய்விட்டதாகவும் குறிப்பிட்டார். அதேபோல் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் முக்கியத்துவத்தையும், திருவள்ளூரில் தூய்மையாகப் பாய்ந்து சென்னைக்கு வரும்போது சாக்கடையாக மாறும் கூவம் ஆற்றின் அவலத்தையும் சுட்டிக்காட்டினார். கூவத்தை தூய்மைப்படுத்த நிதி ஒதுக்குவதுடன் மட்டும் நிற்காமல், அதில் கழிவுகள் கொட்டப்படுவதை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

   

மேலும், வள்ளுவர் கோட்டம், நேரு ஸ்டேடியம் மற்றும் நீதிமன்றங்கள் உட்படப் பல அரசு கட்டிடங்களே ஏரிகளை ஆக்கிரமித்துத்தான் கட்டப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இனிமேலாவது நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றார். மாநிலத்திற்குள் பாயும் காவிரி-குண்டாறு, அத்திக்கடவு-அவிநாசி இரண்டாம் கட்டம், மேட்டூர் உபரி நீர் திட்டம் போன்ற சிறு நதிகளை இணைத்து தூர்வாரினாலே மணல் திருட்டைத் தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். இதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியாவது இத்திட்டங்களைச் செயல்படுத்தினால், அடுத்த 10 ஆண்டுகளில் விவசாயமும் பொருளாதாரமும் உயர்ந்து அந்த கடனை எளிதாக அடைத்துவிட முடியும் என்ற ஆக்கபூர்வமான தீர்வையும் முன்வைத்தார்.

   

சௌமியா அன்புமணியின் இந்தப் பேச்சை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் சமூகவியல் கல்விப் பின்னணியோடும், பசுமைத் தாயகம் அமைப்பில் அவர் ஆற்றும் நீண்டகால சுற்றுச்சூழல் பணிகளோடும் நெட்டிசன்கள் ஒப்பிட்டுப் பாராட்டி வருகின்றனர். தீவிரமான தலைப்புகளைக் கூட மிக எளிமையாகவும் சுவாரசியமான கதைகள் மூலமாகவும் அவையில் எடுத்துரைக்கும் அவரது கலை, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெண்களின் குரலுக்குச் சமூகம் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், தகுதியான தலைவர்கள் அவைக்கு வருவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், சௌமியா அன்புமணி சட்டமன்றத்தில் எழுப்பும் நியாயமான கோரிக்கைகளைக் குறிப்பெடுத்து, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.