என்னது, புரட்சித் தளபதி விஜய்யா?… இப்படி சொல்ல வெட்கமா இல்லையா?… செங்கோட்டையனை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய அதிமுக கே.பி முனுசாமி…!

Spread the love

கிருஷ்ணகிரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி பேசுகையில், திமுக தீய சக்தி, தமிழக வெற்றி கழகம் தூய்மையான கட்சி என்று விஜய் பேசுகின்றார். தமிழக வெற்றி கழகம் எப்படி தூய்மையான கட்சியாக இருக்க முடியும். அவர்கள் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை. எப்படி திட்டங்கள் கொண்டு வருவார்கள் என்று தெரியாது. அப்படி திட்டம் கொண்டு வந்தால் அதை ஒழுக்கமாக எவ்வாறு நிறைவேற்றுவார்கள் என்றும் சொல்ல முடியாது. கட்சி ஆரம்பிக்கும்போது தன்னுடைய ரசிகர்களுடன் ஆரம்பித்தார். அத்தோடு இருந்திருந்தால் ஒரு தனித்தன்மை உள்ள கட்சி என்று கூறி இருக்கலாம். ஆனால் தற்போது பல்வேறு கட்சிகளில் இருந்து உங்களுடன் வந்துள்ளார்கள். அவ்வாறு வந்துள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள்.

எங்கு வசதியான தலைமை பொறுப்பு கிடைக்கும், அடுத்த தேர்தலில் எப்படி நாம் பதவிக்கு வரலாம் என்று நினைப்பவர்கள் தான் தற்போது விஜயுடன் சேர்ந்துள்ளன. அதிமுகவில் உடனடியாக பதவி கிடைத்து விடாது. உழைப்பவர்களுக்கு தான் கட்சி. அதனால்தான் கிராமப்புறத்தில் இருந்த சாதாரண எடப்பாடி பழனிச்சாமி இன்று கட்சியின் பொதுச் செயலாளராக உயர்ந்துள்ளார். அதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே உழைப்பவர்கள். ஆனால் தமிழக வெற்றி கழகம் கட்சிக்குச் சென்றவர்கள் சந்தர்ப்பவாதிகள். அதுபோலத்தான் இங்கிருந்து செங்கோட்டையன் அங்கு சென்றுள்ளார்.

செங்கோட்டையன் 53 ஆண்டுகள் அதிமுகவிலிருந்து எல்லா பதவி சுகத்தையும் அனுபவித்து கொண்டார். புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு அடுத்து புரட்சி தளபதி விஜய் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா? இப்படிப்பட்ட கலவையான மக்கள்தான் அந்தக் கட்சியில் இருக்கின்றன. அது தூய்மையான கட்சி கிடையாது, கலப்படக் கட்சி. ஏன் கலப்பட கட்சி என்றால் இங்கிருந்து செங்கோட்டையன் சென்றுள்ளார். எங்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சுற்றுகிற கூட்டம் விஜய் உடன் வந்துள்ளது. விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாளை உங்களையும் காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு சென்று விடுவார்கள் என்று கே.பி முனுசாமி பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

“45 பந்து.. 101 ரன்கள்” குஜராத்தை கதறவிட்ட திலக் வர்மா… தம்பியின் சதத்தை அண்ணனாகக் கொண்டாடிய பாண்டியா..!!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…

2 minutes ago

சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம்.. தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. தொழிலாளர் துறை எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…

5 minutes ago

EPFO 3.0 அப்டேட்…! 75% வரை பிஎஃப் பணத்தை உடனடியாக எடுக்கலாம்…. புதிய ரூல்ஸ் என்ன சொல்லுது…?

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…

10 minutes ago

புது ஷூ கேட்ட தம்பி… கோபத்தில் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த அண்ணன்… ஒரு நொடி ஆத்திரத்தால் நேர்ந்த விபரீதம்…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…

17 minutes ago

இன்சூரன்ஸ் கம்பெனி பணம் தரமாட்டேங்குதா…? க்ளைம் ரிஜெக்ட் ஆகாம இருக்க இந்த 5 விஷயத்தை பாருங்க…!!

கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…

23 minutes ago

“நெருங்கும் 60 நாள் கெடு” ட்ரம்ப் பணியப் போகிறாரா..? அல்லது விதியை மீறப்போகிறாரா..? உலகையே அதிரவைக்கும் அமெரிக்கப் போர்ச் சட்டம்…!!

அமெரிக்க அரசியலமைப்பில் உள்ள 'யுத்த அதிகாரங்கள் தீர்மானம்' (War Powers Resolution) படி, அதிபர் ஒருவர் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி…

31 minutes ago