அதிமுகவுடன் கூட்டணியில் இணையும் விஜய்… புஸ்ஸி ஆனந்த் நடத்திய கூட்டத்தில் கசிந்த ரகசியம்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

By Soundarya on பங்குனி 13, 2026

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்துவதற்காக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிமுக-வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், விஜய்யின் வெற்றிக்காகத் தங்களுக்குச் சீட் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை எனப் பல நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டணியில் தவெக-விற்கு 50 முதல் 60 இடங்கள் மற்றும் விஜய்க்குத் துணை முதலமைச்சர் (DCM) பதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஒரு சிலர் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.