கரண்ட் ஷாக் கொடுத்து.. மலக்குடலில் கத்தியால் குத்தி.. பாக்., கைதி சித்ரவதை… வீடியோ ஆதாரம் இருந்தும் விடுதலையான இஸ்ரேல் கொடூரர்கள்..!!

By Soundarya on பங்குனி 13, 2026

Spread the love

இஸ்ரேலின் ஸ்ரே தேய்மேன் (Sde Teiman) தடுப்பு முகாமில் பாலஸ்தீனக் கைதி ஒருவருக்கு மின்சார அதிர்ச்சி அளித்தும், மலக்குடலில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியும் மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரமான தாக்குதல் குறித்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளிப்படையாக இருந்தபோதிலும், இதில் தொடர்புடைய 5 இஸ்ரேலிய வீரர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சித்ரவதைக்குள்ளான கைதி, விலா எலும்பு முறிவு மற்றும் மலக்குடல் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக இஸ்ரேலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பாதிக்கப்பட்ட நபர் மீண்டும் காசாவிற்கு அனுப்பப்பட்டதால், வழக்கை மேற்கொண்டு நடத்துவதில் சிக்கல் இருப்பதாகவும், “தவிர்க்க முடியாத சூழல்” நிலவுவதாகவும் கூறி இஸ்ரேலிய இராணுவத் தரப்பு வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

   

ஏற்கனவே இந்தத் தடுப்பு முகாம்களில் பாலஸ்தீனியர்கள் பட்டினி போடப்படுவதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகவும் ஐநா மற்றும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்தச் சூழலில், தெளிவான வீடியோ ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது, சர்வதேச சட்டங்களை இஸ்ரேல் மீறுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.