தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 62 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று தனது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் (மற்றும் ஆதரவ் அர்ஜுனா) சென்னை லயோலா கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சுழற்சி அடிப்படையில் 8 மணி நேரத்திற்கு ஒருமுறை 14 பேர் கொண்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ பாதுகாப்பு குறித்து வேட்பாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் முறையான கண்காணிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ள அக்கட்சியினர், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜய் முதலமைச்சராவது உறுதி என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
