தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்பொழுது வாரிசு திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. இதை தொடர்ந்து லியோ திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் உள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவர் சினிமா துறை சார்ந்த படிப்பை கடந்த ஆண்டு முடித்தார்.
இதை தொடர்ந்து அவர் சினிமாவில் விரைவில் காலடி எடுத்து வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தனது தந்தையைப் போல ஹீரோவாக அல்லாமல் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கனவே ஒரு சில குறும்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் சஞ்சய் ‘புல் தி டிரிக்கர்’ என்கிற குறும்படத்தை இயக்கியிருந்தார். இந்த குறும்படம் யூடியூபில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது லைகா நிறுவனம்.
இதைத்தொடர்ந்து அடுத்த படத்துக்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்களை லைகா நிறுவனம் டிவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்தநிலையில், நடிகர் கவினை வைத்து தனது முதலாவது திரைப்படத்தை ஜேசன் இயக்குவார் என்று ஒரு சில தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் நம்ம தளபதி தானாம்.
இப்படத்தில் அதர்வாவோ அல்லது துருவ் விக்ரமோ நடித்தால் நெப்பாட்டிசத்தின் உச்சக்கட்டம் என கூறப்படலாம். மேலும் இது ஜேசனுக்கு முதல் படம் என்பதால் முதல் படத்திலேயே இவ்வித விமர்சனங்களை பெறுவது வருங்காலத்திற்கு பிரச்சினையாக இருக்கலாம் என விஜய் கூறியுள்ளாராம். தளபதி மகன் சஞ்சய் இயக்குனராக , ஹீரோவாக கவின் கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அமைச்சரவையில் இருந்து அமைச்சர் சரத்குமார் விரைவில் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. சமீபத்தில்…
சமூக வலைதளங்களில் லைக், ஷேர் மற்றும் ஃபாலோயர்ஸ்களைப் பெறுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதமான லட்டு பிரசாதத்தைப் பயன்படுத்துவதாக எழுந்த…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடையில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டச் சாம்பாரில், அதே ஊரைச் சேர்ந்த…
தேசிய அரசியலில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி கருத்துக்கணிப்பு…
சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…