தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், தங்கலான்’ என இரண்டு படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ரித்து வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, ரிலீஸ் செய்யப்பட்ட இதன் டீசர்கள் மற்றும் 2 பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. சில ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கும் இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் படக்குழு நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் 24ஆம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தற்பொழுது திரையிடப்பட உள்ளது. இதோ அந்த அதிகாரபூர்வ அறிவிப்பு…
இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த…
நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…
உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…
ஆக்ரா எக்தா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 17 வயதுடைய இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 6:30…