அட்லீ இயக்கும் படத்தில் தளபதி விஜய்.. ஆனா இது வேற ரூட்டு… செம குஷியில் ரசிகர்கள்..!!

By admin on ஐப்பசி 22, 2024

Spread the love

பிரபல நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த கோட் திரைப்படம் வெற்றி பெற்றது.

   

இந்த படத்தில் லைலா, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். த்ரிஷா, சிவகார்த்திகேயன், ஆகியோர் கேமியோ ரோலில் நடித்தனர். அடுத்ததாக வினோத் இயக்கத்தில் உருவாகும் தனது 69 ஆவது படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

   

 

இந்த திரைப்படத்தை கே வி என் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தனது 69 ஆவது படத்துடன் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போகிறார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கிவிட்டார். இந்த கட்சியின் முதல் மாநாடு 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது.

#image_title

இந்த நிலையில் அட்லி இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் விஜய் நடிக்கப் போவதாக தகவல் உலா வருகிறது. கமல்ஹாசன் சல்மான்கான் ஆகியோர் நடிக்கும் திரைப்படத்தில் விஜய் கேமியா ரோலில் நடிக்க உள்ளார். அனேகமாக ஒரு பாடலுக்கு விஜய் டான்ஸ் ஆட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.