செங்கோட்டையன் கட்டுப்பாட்டில் இயங்கும் விஜய்..? புஸ்ஸி ஆனந்த் போட்ட குண்டு… தமிழக அரசியலில் பரபரப்பு…!!

By Soundarya on மார்கழி 17, 2025

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின்  மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் சமீபத்திய கருத்துக்கள் கட்சிக்குள் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.  விஜய்யை முதலமைச்சராக அமர வைப்பதே எனது ரத்தத்தில் ஓடும் இலக்கு என்று செங்கோட்டையன் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இனி செங்கோட்டையன் வகுக்கும் பாதையில்தான் விஜய்யின் அரசியல் பயணம் அமையும் என்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மூத்த அரசியல் தலைவரான செங்கோட்டையனின் அனுபவத்தை கட்சி முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. தவெகவின் தேர்தல் வியூகங்கள், மாவட்ட வாரியான சுற்றுப்பயணங்கள் மற்றும் சிறுபான்மையினரின் ஆதரவைத் திரட்டுவது உள்ளிட்ட முழுமையான தேர்தல் மேலாண்மைப் பொறுப்புகள் செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தின் (ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி) அமைப்புச் செயலாளர் பொறுப்பும் அவரிடமே உள்ளது.

   

நாளை  ஈரோட்டில் நடைபெறும் தவெகவின் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான அனைத்துப் பணிகளையும் செங்கோட்டையன் முன்னின்று கவனித்து வருகிறார். கரூரில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்குப் பிறகு, கட்சியின் பாதுகாப்பான மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகளுக்குச் செங்கோட்டையனின் வருகை பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது