புதிய திருப்பம்..! செந்தில் பாலாஜி கோட்டையை கைப்பற்றிய விஜய்… தவெகவில் கொத்தாக இணைந்த 400 பேர்…!!

By Soundarya on மார்கழி 17, 2025

Spread the love

கரூரில் திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் இருந்து மாற்றுக்கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் தளத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.  கரூர் மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 400-க்கும் மேற்பட்டோர் திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். 

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தவெக நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. இந்த விவகாரத்தில் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  கரூரில் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு வலுவாக உள்ள நிலையில், அந்த மாவட்டத்திலேயே திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணையும் போக்கு அதிகரித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் தீவிரப் பிரச்சாரமும், உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகளும் கொங்கு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

   

கரூரில் நிலவிய ஒரு மாத காலத் தேக்க நிலைக்குப் பிறகு, மீண்டும் மக்கள் பெருமளவில் தவெகவில் இணையத் தொடங்கியிருப்பது, மாவட்டத்தில் திமுகவிற்கு எதிரான அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது