தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனிடையே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
அதே சமயம் சமீபத்தில் நடந்த கரூர் துயரத்தில் விஜய்க்கு சட்டரீதியாக பல சிக்கல்கள் வந்த நிலையில் அதனை பொறுமையாக கையாண்டு மீண்டும் கட்சியை மீட்டெடுத்துள்ளார். அடுத்தடுத்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை விஜய் தீவிரப்படுத்தி உள்ளார். சமீபத்தில் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்தித்து பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியின் அரசியல் பணிகள் வேகம் எடுத்துள்ளது.
இந்நிலையில் கரூர் துயரத்தில் ஒருவரை மட்டும் பொறுப்பாக்கி விட முடியாது என்று விஜய்க்கு ஆதரவாக நடிகர் அஜித் பேசியுள்ளார். அந்த துயரத்தில் ஊடகம் முற்பட அனைவருக்குமே பொறுப்பும் கடமையும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் தனிப்பட்ட செல்வாக்கை நிரூபிப்பதற்காக கூட்டத்தை கூட்டும் சமூகமாக மாறிவிட்டோம் எனவும் அது எல்லாமே முடிவுக்கு வரவேண்டும் என்றும் அஜித் தெரிவித்துள்ளார்.
