தமிழகத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சூழல் அறிவோம் என்ற மாநில அளவிலான வினாடி வினா போட்டியை அரசு நடத்துகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 50000 வரை பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்க வருகின்ற நவம்பர் 5 புதன்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் இந்த போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் போட்டியில் பங்கேற்பதற்கும், பதிவு செய்யவும், போட்டிக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ளவும் https://www.tackon.org என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
இந்த போட்டியில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் இரண்டு மாணவர்களை உள்ளடக்கிய ஐந்து குழுக்கள் பதிவு செய்யப்படும். எனவே விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் மாநில அளவில் முதலிடத்தை பெற்ற குழுவுக்கு ஐம்பதாயிரம் ரூபாய், மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற குழுவுக்கு 30,000, மூன்றாம் இடம் பெற்ற குழுவுக்கு 20000 ரூபாய், இறுதி சுற்றுக்கு தேர்வாகிய மற்ற போட்டியாளர்கள் 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
