திடீர் டுவிஸ்ட்..! திமுகவின் வெற்றிக்கு அஸ்திவாரமிடும் விஜய்..? 2026-தேர்தலில் இதுதான் நடக்கபோகுது… கட்சிதமாக கணித்த பிரபல பத்திரிகையாளர்..!!

By Soundarya on தை 31, 2026

Spread the love

பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன் தனது சமீபத்திய அரசியல் அலசலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) வருகையால் திமுக கூட்டணிக்கு கிடைக்கப்போகும் சாதகமான அம்சங்கள் குறித்துத் தெரிவித்துள்ளார்.  விஜய்யின் கட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும்போது, அது அதிமுக மற்றும் பாஜகவின் வாக்குகளை அதிகம் பிரிக்கும் என ராமகிருஷ்ணன் கணித்துள்ளார். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வாக்குகள் விஜய்க்குச் செல்லும்போது, அது ஆளுங்கட்சியான திமுகவிற்கு எதிரான வாக்குகளைச் சிதறடித்து, மறைமுகமாக திமுகவின் வெற்றியை எளிதாக்கும்.

அதிமுக தலைமையிலான கூட்டணி இன்னும் முழுமையடையாத நிலையில், விஜய் ஒரு மாற்று சக்தியாக உருவெடுப்பது எதிர்க்கட்சி வாக்குகளைத் துண்டாடும். இது திமுக தலைமையிலான கூட்டணிக்கு கூடுதல் பலமாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.