#image_title
தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.
அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி தற்போது விஜய் அரசியலுக்குள் நுழைகிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள இவர் இன்னும் ஒரே ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு பின்னர் அரசியலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். அப்போது முழுக்க முழுக்க அவர் நடித்த ஆக்ஷன் திரைப்படம் என்றால் அது திருமலைதான். அந்த படத்தை அறிமுக இயக்குனர் ரமணா இயக்கி இருந்தார்.
அதுவரை மீசை க்ளீன் ஷேவ் கெட்டப்பில் இருந்த விஜய் அந்த படத்தில்தான் முதல்முறையாக தன் கெட்டப்பை மாற்றினார். திருமலை படம் ஒரு ஆக்ஷன் படம் என்றாலும் அதிலும் ஆழமான காதல் காட்சிகள் விஜய்க்கும் ஜோதிகாவுக்கும் இடையில் இருக்கும்.
அந்தகாதலின் வலியை வெளிப்படுத்தும் விதமாக “நீயா பேசியது” பாடல் படத்தில் இடம்பெற்றிருக்கும். இந்த பாடல் உருவான கதையை இயக்குனர் ரமணா ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “விஜய் சாருக்கு அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இடம்பெற்ற ‘என்ன சொல்ல போகிறாய்?’ பாடல் ரொம்ப பிடிக்கும்.
அந்த பாடல் போலவே நம் படத்தில் ஒரு பாடல் வேண்டும் என அவர் கேட்டார். அதற்காகதான் நீயா பேசியது பாடலை உருவாக்கினோம்” எனக் கூறியுள்ளார். இரண்டு பாடல்களுமே இன்றளவும் கேட்டு ரசிக்கும்படி கிளாசிக் பாடல்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…
கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…