கதை சொல்ல வரும் இயக்குனர்கள்.. ஸ்ட்ரிட்டாக கண்டிஷன் போட்ட விஜய்.. கடைசி படம் அந்த மாதிரி இருக்குமா..?

By Priya Ram on மார்ச் 28, 2024

Spread the love

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், பிரேம்ஜி, சினேகா லைலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

   

மேலும் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு பாடல் காட்சியும் செய்யப்பட்டுள்ளது. டைம் ட்ராவலை மையப்படுத்தி உருவாகும் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் கோட் திரைப்படம் எப்போது வெளியாகும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார்.

   

 

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார். அவரது கட்சி சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விஜயின் 69-ஆவது படம் தான் அவரது கடைசி படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கடைசி படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற கேள்வியும் எழுந்தது.

இயக்குனர்களான எச்.வினோத், வெற்றிமாறன், அட்லி ஆகியோர் விஜயின் கடைசி படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வலம் வந்தது. இதில் எச்.வினோத் பொதுவாகவே தனது படங்களில் சமூக அக்கறை உள்ள விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பார். எனவே வினோத் இயக்கத்தில் விஜய் நடித்தால் படம் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் விஜய் வேறு ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு வாருங்கள் என கூறுகிறாராம். மேலும் 60 நாள்தான் கால்ஷீட் அதற்குள் படத்தை முடிக்க வேண்டும் எனவும் கூறுகிறாராம். இதற்கு காரணம் அரசியலில் முழு ஈடுபாட்டோடு மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்பதாக கூட இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் விஜய் 69-ஆவது படத்தின் இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.