‘என் முகவரி நீ அம்மா’.. தாய் ஷோபாவுக்காக பிரமாண்டமாக கோவில் கட்டியுள்ள தளபதி.. வெளியாகி வைரலாகும் புகைப்படம்..

By admin on சித்திரை 9, 2024

Spread the love

பிரபல நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ரஷ்யா சென்றுள்ளனர். தனது 69 ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக நடிகர் விஜய் ஏற்கனவே அறிவித்தார்.

   

மேலும் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார். இந்த நிலையில் நடிகர் விஜய் சாய்பாபா கோவிலில் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலானது. மேலும் அந்த கோவிலை விஜய் தான் தனது அம்மா சோபாவுக்காக கட்டி கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

   

 

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூரில் அந்த கோவில் அமைந்துள்ளது. சுமார் 8 ஏக்கர் நிலத்தில் விஜய் தனது தாய்க்காக அந்த கோவிலை கட்டிக் கொடுத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி தான் அந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

கும்பாபிஷேகத்தில் நடிகர் விஜய் தனது அம்மாவுடன் கலந்து கொண்டுள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் அதில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிகின்றனர்.