“விஜய் போட்ட போடு”…. கதறும் காங்கிரஸ் மற்றும் கூட்டணியினர்…. பின்னணியில் பாஜகவா?…. வெளியான பரபரப்பு தகவல்….!

By Nanthini on கார்த்திகை 10, 2026

Spread the love

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் குழுவை திடீரென கலைத்து உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் மாநில உரிமைகளையும் கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இக்குழு, தனது முதல்கட்ட அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்திருந்தது. இந்நிலையில், கூடுதல் பணிகள் அனைத்தும் மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகக் கூறி நிர்வாக ரீதியாக இக்குழுவை தவெக அரசு முழுமையாகக் கலைத்துள்ளது.

இந்த அதிரடி முடிவால், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடுமையான கருத்து மோதல்களும் பிளவுகளும் வெடித்துள்ளன. உட்கட்சிப் பூசல்களுக்குப் பெயர் பெற்ற காங்கிரஸில், இம்முறை விஜய் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரண்டு வேறான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. வழக்கமான கோஷ்டி மோதல்களையும் தாண்டி, இச்சம்பவம் கதர் கட்சிக்குள் பெரும் கொள்கை முரண்பாட்டையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

   

அரசின் முடிவை தீவிரமாக நியாயப்படுத்தும் தவெக ஆதரவு காங்கிரஸ் தரப்பினர், ஒரே பணிக்காக இரண்டு அமைப்புகள் தேவையில்லை என்பதால் இது வெறும் நிர்வாகச் சீரமைப்பே என்று வாதாடுகின்றனர். ஆனால், கட்சியின் பாரம்பரிய மற்றும் கொள்கை சார்ந்த தலைவர்களோ, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் போக்கிற்கு எதிராக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை பாதியிலேயே முடக்குவது கூட்டாட்சித் தத்துவத்திற்கே இழைக்கப்பட்ட அநீதி என்று கொதிக்கின்றனர்.

   

அதேவேளையில், தவெக அரசின் இந்த முடிவை பாஜக வரவேற்றுள்ள நிலையில், திமுக மற்றும் விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. டெல்லி மேலிடத்தை திருப்திப்படுத்தவும், மத்திய பாஜக அரசைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவுமே விஜய் அரசு இக்குழுவைக் கலைத்துள்ளதாகக் காங்கிரஸின் ஒரு தரப்பினர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

மத்திய அரசின் அதிகாரக் குவிப்பைத் தொடர்ந்து எதிர்க்கும் காங்கிரஸ், தமிழகத்தில் மாநில உரிமைக் குழுவைக் கலைத்த விஜய் அரசை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற நிலையை எடுக்க முடியாமல் திணறி வருகிறது. விஜய் அரசின் இந்நடவடிக்கை வெறும் நிர்வாக ரீதியிலான முடிவா அல்லது தேசிய அரசியலில் பாஜகவுடன் சமரசம் செய்து கொள்வதற்கான தொடக்கப்புள்ளியா என்ற விவாதம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது புயலைக் கிளப்பியுள்ளது.