100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலி… இறங்கி அடித்த தமிழக அரசு…. நள்ளிரவில் வெளியான அரசாணை… முதல்வர் விஜய் போட்ட ஆர்டர்…!

By Nanthini on ஆடி 29, 2026

Spread the love

தமிழ்நாட்டில் அரசு நிர்வாகத்தை மேலும் சுறுசுறுப்பாக்கும் நோக்கில், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு தொடர் உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இதன் முக்கியப் பகுதியாக, மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் பலரை இடமாற்றம் செய்தும், புதிய பொறுப்புகளில் நியமித்தும் பொது துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் ஆளுநரின் உத்தரவுப்படி வெளியிட்டுள்ள இந்த அரசாணையில், பல அதிகாரிகளின் சேவைகள் பல்வேறு அரசு வாரியங்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவின்படி, சிப்காட் பொது மேலாளராக இருந்த எல். மைதிலி சென்னை செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவு இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் செயலாளராக இருந்த ஆர். பாலசுப்பிரமணியன் திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும், நகர்ப்புற வாழ்விட அபிவிருத்தி வாரியச் செயலாளர் எஸ். வெங்கடேஷ் மின்-ஆளுமை இயக்குநரக இணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையரக இணை ஆணையராக இருந்த சி. அஜய் சீனிவாசன் சென்னை பயிற்சி தலைமை இயக்குநர் அலுவலகத்திலும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியைச் சேர்ந்த கே. காயத்ரி சுப்ரமணி மதுவிலக்குத் துறையிலும் புதிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.

   

நகராட்சி நிர்வாக ஆணையரக இணை ஆணையராக இருந்த டி. அழகர்சாமி நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகவும் (நிலம் கையகப்படுத்துதல்), ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தைச் சேர்ந்த எஸ். வள்ளி நகராட்சி நிர்வாக ஆணையரக இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விடுப்பிலிருந்து திரும்பிய எம்.ஆர். கண்ணகி மனிதவள மேலாண்மைத் துறை ஆய்வாளராகவும், டாக்டர் பி. முருகேசன் கூடலூர் ஜன்மம் நிலங்களின் தீர்வு அலுவலராகவும், பி. குமாரேஸ்வரன் கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கத் திட்டச் சிறப்பு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பி. முருகேசன், எஸ். வள்ளி மற்றும் பி. குமாரேஸ்வரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த முந்தைய இடமாற்ற உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

   

அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனில் பணிபுரிந்த டாக்டர் பி.எம். செந்தில்குமார் வீட்டுவசதி வாரியச் செயலாளராகவும், வி. லதா கேபிள் டிவி கார்ப்பரேஷனின் நிர்வாகப் பொது மேலாளராகவும் நியமிக்கப்பட அவர்களின் சேவைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல, ஜி. சிவருத்ராயா இடர் குறைப்பு முகமையின் இணை இயக்குநராகவும், கே. ராமமூர்த்தி நகர்ப்புற வாழ்விட அபிவிருத்தி வாரியச் செயலாளராகவும், ஏ. சிவகாமி திருநெல்வேலி மருக்களுகறிச்சி திட்டச் சிறப்பு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வெளிப்பணிக்கான நியமன விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த தனி உத்தரவுகள் சம்பந்தப்பட்ட செயலக நிர்வாகத் துறைகளால் விரைவில் வெளியிடப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.