வங்கி மேலாளரின் கன்னத்தில் பளார்… மு.க. அழகிரியின் மகள் நள்ளிரவில் கைது… அடுத்த 2 நிமிடத்தில் நடந்த டுவிஸ்ட்…. ஆடிப்போன அரசியல் களம்….!

By Nanthini on ஆடி 29, 2026

Spread the love

சென்னை அடையாறில் திமுக முன்னாள் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் பேத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில் காந்தி நகர் எஸ்பிஐ என்ஆர்ஐ வங்கிக் கிளை இயங்கி வருகிறது. அந்தக் கட்டிடத்தில் இருந்த லிஃப்ட் நீண்ட நாட்களாகப் பழுதடைந்திருந்த நிலையில், அதைச் சீரமைப்பது தொடர்பாக வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங் நேரடியாகக் கயல்விழியிடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கயல்விழி, வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இச்சம்பவத்தைக் கண்டித்து, எஸ்பிஐ தலைமை மேலாளர் நமச்சிவாயம் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை சாஸ்திரி நகர் காவல்துறையினர் கயல்விழி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்குத் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு காவல்துறை சார்பில் அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஆஜரான கயல்விழியிடம், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் காண்பித்து காவல்துறையினர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

   

விசாரணையின் முடிவில் இந்த வழக்கு தொடர்பாகக் கயல்விழியைப் போலீசார் முறைப்படி கைது செய்தனர். இருப்பினும், அவர் மீது சுமத்தப்பட்ட பிரிவுகளின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே காவல் நிலைய பிணையில் உடனடியாக விடுவிக்கப்பட்டார். பிணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.