தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்காக தளபதி விஜய்க்கு மட்டுமே 200 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்தை ஒரு மல்டி ஸ்டார் திரைப்படம் போல் இயக்கி ரசிகர்களை வெங்கட் பிரபு அசர வைத்தார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் முதல் நாளிலேயே 100 கோடி வசூல் சாதனையை சாத்தியமாக்கியது. ஒரே வாரத்தில் 25 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய கோட் திரைப்படம் 25 நாட்களை கடந்தும் தமிழகத்தில் பல திரையரங்குகளில் ஓடியது.
தற்போது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ரெக்கார்ட் பிரேக்கிங் என்று கூறி, கோட் படத்தின் லைஃப் டைம் பாக்ஸ் ஆபீஸ் வசூலை தற்போது அறிவித்துள்ளார். அதன்படி கோட் திரைப்படம் இதுவரை 455 கோடி வசூல் செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…
உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…
பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…