Categories: சினிமா

5 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் விஜய் பட இயக்குனரின் மனைவி… கண்டுகொள்ளாத திரைத்துறை…

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் இயக்குனர் விக்ரமன். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். இவருடைய படங்கள் எல்லாம் குடும்பப்பாங்கான மற்றும் பெண்களின் மீதான சமூக அக்கறையை மையமாகக் கொண்டது. இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த புதுவசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இவரின் முதல் படமே தமிழக அரசின் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான இரண்டு விருதை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து, பெரும்புள்ளி கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வனத்தைப்போல உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கினார். இதில் பூவே உனக்காக திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் பல பிரபலமான நடிகர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மகன் விஜய் கனிஷ்காவும் தற்பொழுது திரையுலகில் ஹீரோவாக களமிறங்கி கலக்கி வருகிறார். இவர் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘நினைத்தது யாரோ’ என்கிற படத்தை தான் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பின்னர் எந்த படங்களையும் இயக்கவில்லை . சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் தனது மனைவியை குறித்து கூறியிருந்தார். அதில் அவர் கூறியதாவது, ‘தன்னுடைய மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், திரைப்படங்கள் இயக்கவில்லை என்றும்,

தன் மனைவி ஜெயப்ரியா ஒரு  நடன கலைஞர் என்றும், 4000 மேடைகளில் ஆடியவர் என்றும் கூறினார்.  இவருக்கு உடலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக மேற்கொண்ட சிகிச்சை தவறாகி போன காரணத்தால்,  5 வருடங்களாக படுத்த படுக்கையாக இருக்கும் ஜெயப்ரியாவால் தன்னுடைய வேலைகளை கூட செய்து கொள்ளமுடியாது என்றும் கூறினார். அதனால் தான் மனைவியின் அருகிலேயே இருந்து அவரை கவனித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவ்வளவு நடந்தும் திரையுலகம் இதை கண்டுகொள்ளாமல் இருப்பதும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தான் உள்ளது.

Begam

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

4 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

4 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

6 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

6 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

6 மணத்தியாலங்கள் ago