விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் 7 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 28 நாட்களை நிறைவு செய்துள்ளது.இந்த சீசனில் புதிதாக இரண்டு வீடுகளாக பிரித்து ஸ்மால் பாஸ் வீடு, பிக் பாஸ் வீடு என விளையாடி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கும் , சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், முதல் வாரம் அனன்யா வெளியேற அடுத்து பாவா செல்லத்துரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேற்றப்பட்டார் . இதை தொடர்ந்து கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு குறைவான வாக்குகள் பெற்று விஜய் வர்மா வெளியேறினார்.
தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் உள்ள மொத்தம் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களை தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறக்க இருப்பதாக ஏற்கனவே ஆண்டவர் கூறியிருந்தார்.
5 வைல்ட் கார்டு என்ட்ரி வர இருப்பதால் இந்த வாரம் 2 எலிமினேஷன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதன்படி சரவண விக்ரம், அக்ஷயா இருவரும் குறைவான வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் wild card என்ட்ரி ஐந்து பேர் என்று கூறப்பட்டதிலிருந்தே அவர்கள் யார் யார் என பல்வேறு வதந்திகள் கடந்த ஒரு வாரமாக இணையத்தை ஆக்கிரமித்தது.
தற்போது புதிதாக களமிறங்கும் அந்த 5 wild card போட்டியாளர்கள் பற்றிய உறுதியான தகவல் இணையத்தில் வெளிவந்துள்ளது. அதன்படி, பாடகர் கானா பாலா, சீரியல் நடிகை அர்ச்சனா, சீரியல் நடிகர் தினேஷ்( சீரியல் நடிகை ரக்ஷிதாவின் கணவர்), நகைச்சுவை பேச்சாளர் அண்ணா பாரதி, RJ பிராவோ என்றும் கூறப்படுகிறது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…