தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றுதான் 20 வருடங்களுக்கு முன்பாக வெளிவந்த கில்லி. இந்த படம் கடந்த வருடம் தான் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது, அப்போதும் இந்த படம் வசூலில் பட்டையை கிளப்பியது, இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக புவனா என்றதா பாத்திரத்தில் ஜெனிபர் என்பவர் நடித்திருந்தார், இவர் கில்லி படம் மட்டும் இல்லாமல் நேருக்கு நேர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
View this post on Instagram
கில்லி படத்தில் இவர்கள் இருவரும் கதாபாத்திரமும் நன்றாக இருந்தது. சினிமாவில் நடிக்கும் ஒரு சில நடிகைகள் அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் வேறு பிசினஸில் இறங்கி விடுகிறார்கள். அந்த வகையில் நடிகை ஜெனிபரும் தற்போது படங்களில் நடிக்க வாய்ப்பு எதுவும் வராத நிலையில் சொந்தமாக தொழில் தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார் .அதாவது இயற்கை முறையில் சோப்புகள் தயாரித்து அதை விற்பனை செய்து வருகிறார்.
